நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை உடன் பணிவரன்முறை செய்திட வேண்டும்: மருந்தாளுநர் சங்கம் தீர்மானம்

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் புதுக்கோட்டை  மாவட்ட பொதுக்குழு தனிநபர் இடைவெளியுடன்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இம்மாவட்ட பொதுக்குழு கூட்டத்தினை மாவட்ட தலைவர் ச.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  மூத்த மருந்தாளுநர் கனகமுத்து வரவேற்புரை நல்கினார்.மாவட்ட செயலாளர் ஆ.வள்ளியப்பன் வேலை அறிக்கையினை வாசித்தார். மாவட்ட பொருளாளர் க.முத்தமிழ்ச் செல்வன் வரவு செலவு அறிக்கை மற்றும் இவ்வருட சந்தா நிலுவையை முழுமையாக திரட்டுதல் குறித்து உரையாற்றினார்.

மாவட்ட பொதுக்குழுவில் அனைத்து மருந்தாளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மற்றும் மருந்து கிடங்கு அலுவலர்  பங்கேற்று ஆக்கப்பூர்வமான கருத்துகளை வழங்கி விவாதித்தனர்.மாநில தணிக்கையாளர் பெ.ராஜராஜன் மற்றும் மாநில செயலாளர் ச.ஹேமலதா ஆகியோர் சங்கத்தின் கடந்த கால சாதனைகள் குறித்தும் தொடர் போராட்டங்களின் அவசியம் குறித்தும் பேசினர். மாநில பொதுச்செயலாளர் உ.சண்முகம் மருந்தாளுநர்கள் வாழ்வின் நீண்டகால வரலாறு மற்றும் தொடர் போராட்டங்கள் பெற்றுத் தந்த வெற்றிகள், நம் முன் நிற்கும்  முக்கியமான கடமைகள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

நிறைவுரையாக பேசிய மாநில தலைவர் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளின் உழைப்பையும்,  உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் பாராட்டியதோடு கோரிக்கை அட்டை இயக்கம் மற்றும் கோரிக்கை அஞ்சல் இயக்கம் போன்ற இயக்கங்கள் அரசிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும், தமிழகம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் 5/11/2020-ல் நடத்தவுள்ள கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மிக சக்தியாக நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து மாவட்ட மையத்தின் சார்பில் நாட்காட்டி நிதி மற்றும் 41 உறுப்பினர் சந்தா மாநில மையத்திடம் வழங்கப்பட்டது. மாவட்ட அமைப்பு செயலாளர் கலைவாணி நன்றியுரை  கூறினார். வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைக்கப்பட்டு அரசு விதிகளின்படி முறையாக நகராட்சி ஆணையரால் பணி நியமனம் செய்யப்பட்ட 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்கள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக  தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டவாறு 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை உடன்  பணிவரன்முறை செய்திட  வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகள் அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 85 = 86