தேசிய பசுமை படை திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடும் விழா

தேசிய பசுமைப்படையின் சார்பாக மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடும் விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றது.

அக்டோபர் 19 இன்று நிலத்தடி நீரை பாதுகாக்கவும், இயற்கையை அழிவில் இருந்து மீட்கவும் தேசிய பசுமைப்படை திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடும் விழா தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் மரக்கன்று நட்டு, விதைகளை ஊன்றியும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் 5 ஆயிரம் பனை விதைகள், 5 ஆயிரம் புங்கன் விதைகள் மற்றும் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் சுதாகர், கார்த்திகா தேசிய பசுமைப் படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்கண்ணன் சிலட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ராணிராஜா, ஆசிரியர்கள் இளங்கோவன், கோவிந்தராஜன், சுபா, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் சசிகுமார், ராஜா, தமிழ்மாறன்,வேந்தன், தேசிய பசுமைப் படையின் மாணவர்கள் மற்றும் சிலட்டூர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =