புதுக்கோட்டையில் ஏபிஜே பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் பேரணி!

புதுக்கோட்டைபுத்தாஸ் வீரக்கலைகள் கழகம் மரம் அறக்கட்டளை  சார்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின்  பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் பேரணி !

புதுக்கோட்டையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை  இணைந்து நடத்திய மரம்வளர்ப்பு  விழிப்புணர்வு  சைக்கிள் பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை    திலகர் திடலில்  நடைபெற்ற  சைக்கிள் பேரணியை எஸ்விஎஸ் .ஜெயக்குமார் முன்னிலையில்  வருவாய் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சைக்கிள் பேரணி திலகர்திடலில் தொடங்கி மச்சுவாடி வழியாகக் கடந்து ராஜப் பட்டிகிராமத்தை சென்றடைந்தனர். அங்கு  நடைபெற்ற நிகழ்வில், புத்தாஸ் வீரக்கலைகள் கழகத்தலைவர் சேதுகார்த்திகேயன் கலந்து கொண்டு கிராம பொது மக்களுக்கு மரக்கன்று வளர்ப்பு பற்றிப்  பேசினார். இதில் .புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை மரம் ராஜா, தலைவர் முத்தையா, கவுன்சிலர் செல்வராஜ் , உறுப்பினர்  கணேசன்  கிராம பொது மக்கள், நற்பணிஇளைஞர்கள்  கலந்துகொண்டனர். புத்தாஸ் வீரக்கலைகள் மாணவ,மாணவியர்கள் பொதுமக்கள் அனைவரும்  மரம் வளர்ப்போம் என  உறுதி ஏற்றுக்கொண்டனர்.                  

     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

81 − = 77