ராகவேந்திரா திருமண மண்டப சொத்து வரி விவகாரம்: அனுபவமே பாடம் ரஜினிகாந்த் கருத்து

ராகவேந்திரா திருமண மண்டப சொத்து வரி விவகாரத்தில் அனுபவமே பாடம் என டுவிட்டரில் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரி விதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து, வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ராகவேந்திரா மண்டப சொத்து வரி. நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 11 =