முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதை தவிர்க்க நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய்சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு ‘800’ என தலைப்பிட்டுள்ளது. படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா எழுதி உள்ள கடிதத்தில், முத்தையா முரளிதரன் வாழ்வியல் படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும். முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா என பாருங்கள். விஜய் சேதுபதியை நினைத்து கோபப்படுவதா? அறியாமையை நினைத்து சிரிப்பதா?.நம் ஈழத்தமிழ்பிள்ளைகள் இந்த முத்தையா. எங்களை பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கை துரோகி தான். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும், கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + = 20