க/பெ.ரணசிங்கம் திரைப்பட இயக்குநர் மீது கறம்பக்குடி போலீசில் புகார்: தனது கதை திருடப்பட்டதாக எழுத்தாளர் குற்றச்சாட்டு

நடிகர் விஜய் சேதுபதி நடித்த க /பெ.ரணசிங்கம் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள தித்தான்விடுதி சேர்ந்த எழுத்தாளர் மிடறு முருகதாஸ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கறம்பக்குடி போலீசில் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கதை, கட்டுரை, கவிதை போன்றவை எழுதி வருகிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகியாக உள்ளேன் இந்நிலையில் நான் எழுதிய கடந்த 2017ம் ஆண்டு கதைசொல்லி மாத இதழில் வெளியான தவிப்பு என்ற கதையை மையமாக வைத்து க/பெ.ரண சிங்கம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதை 2018ம் ஆண்டு நான் வெளியிட்ட தூக்கு கூடை என்ற புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. எனவே அனுமதி பெறாமலேயே எனது கதையை பயன்படுத்தி, க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை எடுத்த இயக்குநர் விருமாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து முருகதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, 2017ம் ஆண்டு வெளியான எனது கதையை பயன்படுத்தி இருப்பது தெளிவாக தெரிகிறது என்னிடம் கேட்டிருந்தால் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நடந்த கதையை வழங்கி இருப்பேன், ஆனால் எந்த தகவலும் சொல்லாமல் படமெடுத்திருப்பது வருத்தத்தை தருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 60 = 62