டிக்டாக் மூலம் பிரபலமடைந்த உடன்குடி முத்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு விசம் குடித்து தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவம் பரபர்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி வெங்கடாசலப்புரசத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் டிக்டாக் – மூலம் மிகவும் பிரபலமானவனர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் ஏராளம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்தது. இதனைத்தொடர்ந்து டிக்டாக் செயலியை தடை செய்ததும் பலமுறை புலம்பிய படி வீடியோக்களை பதிவுகளை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் மாலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் குடும்ப பிரச்சனை காரணமாக டிக்டாக்கில் வீடியோ பதிவிட முடியவில்லை எனவும், நான்கு குழந்தைகள் இருப்பதால் தற்கொலை செய்து கொள்ள மனமில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து சில நிமிடங்களில் அவர் விசம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைகாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்க அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குலசேகப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
