ஐ.பி.எல்., கிரிக்கெட்:பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் இன்றைய முதலாவது லீக் போட்டியில், பஞ்சாப் அணி வெற்றி பெற 165 ரன்களை இலக்காக கோல்கட்டா அணி நிர்ணயித்துள்ளது.
அபுதாபியில் இன்று நடந்த லீக் போட்டி ஒன்றில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், திரிபாதி (4), நிதிஷ்ராணா(2) ரன்களுக்கு அவுட்டானார்கள். மார்கன் 24 ரன்களுக்கு அவுட்டானார். ஷூப்மன் கில் 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரைசதமடித்தார். அவர் 29 பந்துகளில் 2 சிக்சர்கள், 8 பவுண்டர்கள் அடித்து அணியின் ரன்களை உயர்த்தி அவுட்டானார். இறுதியில் கோல்கட்டா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 2