விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வட்டாட்சியரிடம் மனு

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு முதல் சுதந்திரப் போராட்ட தற்கொலைப்படை போராளி குயிலியின் பெயரை சூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் சார்பாக கோரிக்கை மனுவை வட்டாட்சியர் ஜெயலெட்சுமியிடம் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு புதிய கட்டிடங்களுடன் திறப்பிற்காக காத்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் மாநகரின் பிரதான போக்குவரத்து மையமாக உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இந்த பேருந்து நிலையம் ‘சீர்மிகு நகரம்’ திட்டத்தின் கீழ், பழைய பேருந்து நிலையம் சுமார் ரூ.3.30 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பேருந்து நிலையத்திற்கு சுதந்திரப் போராட்டத்தின் முதல் தற்கொலைப் படை போராளி வீர மங்கை குயிலியின் பெயரை சூட்டவேண்டும் என்று திருப்பத்தூர் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வட்டாட்சியர் ஜெயலெட்சுமியிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவில் நம் தாய்த் திருநாட்டில் ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கைச் சீமையை மீட்க தன் உயிரென கருதாமல் இன்னுயிர் நீத்த உலகத்திற்கே பெண் இனத்தின் வீரத்தை பிரதிபலித்த மாபெரும் போராளி, வீரமங்கை வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய உளவாளி, மெய்க்காப்பாளர், பெண்கள் படையின் தளபதி, உலகத்தின் முதல் தற்கொலைப் படை போராளி குயிலி பெயரை சூட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த மனுவை பெற்ற வட்டாட்சியர் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படுவதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

38 − = 33