ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த கோரி ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற திட்டத்தை அறிவித்தார். நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதே இதன் நோக்கம். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். மேலும் நீர் மேலாண்மையை பெண்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 7 = 16