சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் சிவாஜி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சிவாஜி கணேசனின் பிறந்த நாள் தஞ்சாவூரில் கொண்டாடப்பட்டது. தஞ்சை மணி மண்டபம் அருகில் உள்ள சிவாஜி உருவ சிலைக்கு சோழ மண்டல பாசறை சார்பில் தலைவர் சதா வெங்கட்ராமன் தலைமையில் பாஸ்கர், ராஜசேகர், கண்ணன், சுகுமார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் முககவசங்களை வழங்கினர்.

இது குறித்து சதா வெங்கட்ராமன் கூறியதாவது: சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் சிவாஜி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். மறைந்த சிவாஜிகணேசன், பராசக்தி படத்தில் கருணாநிதி எழுதிய வசனத்தை உச்சரித்தார். இந்த நடிகரை தமிழகமே திரும்பிப் பார்த்தது. குடும்பபாங்கான படங்கள் சிவாஜி கணேசனின் வசன உச்சரிப்புக்கும் நடிப்புக்கும் பெரிதாகக் கை கொடுத்தன. புராணம் மற்றும் வரலாற்றுப் பாத்திரங்களிலும் சிவாஜி கணேசனைப் போல் ஒரு நடிகரை இனி என்றுமே காண முடியாது என்று அனைவராலும் புகழப்பட்டார். ஜூலியஸ் சீசர், பாரதி, பகத்சிங், ஹாம்லட், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வீரபாகு, சிவபெருமான், திருமால், நாரதர், அப்பர், பரதன், கர்ணன் போன்ற பல்வேறு பாத்திரங்களிலும் சிவாஜி கணேசனின் நடிப்பு ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. தந்தையாக, அண்ணனாக, கணவனாக, காதலனாக, நண்பனாக, தலைவனாக பல அவதாரங்கள் எடுத்த சிவாஜி கணேசனின் பாசம் மிகுந்த பாத்திரங்கள் தமிழக மக்களின் குடும்ப வாழ்வுடன் பின்னிப் பிணைந்து விட்டன. எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் தொடங்கி ரஜினி, கமல், பாக்யராஜ், விஜய் வரை ஏராளமான கதாநாயகர்களும் சிவாஜியுடன் நடித்துள்ளனர். இதில் மாதவன், சுரேஷ், சோமு, கணேசன், பாலசீதாராமன், செல்வராஜ், ராஜ் கண்ணு, சிவா, நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 26 = 33