கோவையில் டாஸ்மாக் தொழிலாளர்களின் கூட்டு குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

டாஸ்மாக் மதுக்கூட பார் ஊழியர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு மதுக்கடை ஊழியர்களை கைது செய்வதை கண்டித்து கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர்களின் கூட்டு குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதிலும் கொரனா காலத்திலும் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருவதோடு அரசுக்கு 30ஆயிரம் கோடிக்கு மேல் டாஸ்மாக் விற்பனையின் மூலம் வருவாய் ஈட்டி தருகின்றோம். இன்னிலையில் அரசு மதுக்கடை அருகே இருக்கும் மதுக்கூட பார் ஊழியர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு மதுக்கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவது, வழக்கு பதிவு செய்வது போன்ற செயல்களால் மதுக்கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கூறி கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்ச்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டது.


இதில் கடந்த 26ம் தேதி கடை எண் 1716, 1597 கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்களை ஆய்வு செய்த காவல்துறையினர் பணிமுடிந்து கடையை விட்டு வெளியே வந்த மதுக்கடை பணியாளர்களை எந்த வித விசாரனையும் மேற்கொள்ளாமல் அப்பகுதியிலேயே குற்றவாளியை போல தாக்கியுள்ளனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையே இதுபோன்று தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையேயே காட்டுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடிருந்தனர். உடனடியாக அரசு டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் டாஸ்மாக் பணியாளர்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் எச்சரித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − = 55