கறம்பக்குடி அருகே அழகு சைல்டு லைன் மற்றும் கருத்தரங்கு விழிப்புணர்வு கூட்டம்

கறம்பக்குடி அருகே அழகு சைல்டு லைன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு (1098) கருத்தரங்கு கூட்டம் திருமணஞ்சேரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட திருமணஞ்சேரி கிராம ஊராட்சியில் சைல்டு லைன் (1098) மற்றும் பாலியல், கருத்தரங்கு கூட்டம் அரசு அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி தாய்மார்கள், கூட்டு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். இதில் ஊராட்சி மன்ற செயலர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். சைல்டு லைன் விழிப்புணர்வு கூட்டத்திற்கு கறம்பக்குடி வட்டாட்சியர் ஷேக்அப்துல்லா தலைமை வகித்தார். கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் செபாஸ்டின்ரவி, மழையூர் காவல் உதவி ஆய்வாளர் துர்காதேவி, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவி (கிராம வளர்ச் சிகள்) குழந்தைகள் பாதுகாப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புதுக்கோட்டை மாவட்டம் சைல்டுலைன் 1098 குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுப்பு மருத்துவ விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விழிப்புணர்வில் கறம்பக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்மேரி மற்றும் களப்பணியாளார்கள் விழிப்புணர்வில் உடனிருந்தனர். கிராம பொதுமக்கள் குழந்தைகள் நலன்காப்பது பற்றிய விழிப்புணர்வு பற்றிய கலந்துரையாடல் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஊராட்சி உறுப்பினர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை அதிகாரிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்தனர். மேலும் தாய்மார்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தனர். இந்த முகாமில் ஊராட்சி உறுப்பினர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை அதிகாரிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்தனர். மேலும் தாய்மார்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தனர். நிறைவாக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 81 = 85