இன்ஜி., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் இன்று தொடங்கியது.

இன்ஜி., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் இன்று (அக்.,01) தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடக்கிறது.

தமிழகத்தில் 461 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 1,12406 பேர் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதிப்பெற்றனர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 28ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்ஜி., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று (அக்.,01) ஆன்லைனில் தொடங்கியது.

முதல்கட்டமாக இன்று முதல் 5ம் தேதி வரை சிறப்புப் பிரிவு மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். விளையாட்டுப் பிரிவினர் 1409 பேருக்கும், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் 855 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் 149 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 8ம் தேதி முதல் 27ம் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும், 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும் நடைபெற உள்ளது.

கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே எந்த நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக் குழு சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கணினி-இணைய வசதி இல்லாதவர்கள், மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களை www.tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

57 + = 65