தஞ்சாவூரில் லாக்கப் எனும் பெயரில் புதிய ரெடிமேடு துணியகம் திறப்பு விழா

தஞ்சாவூரில் லாக்கப் எனும் பெயரில் புதிய ரெடிமேடு துணியகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகரும், தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழிலில் அய்யனார், நினைத்தாலே இனிக்கும், அங்காளி பங்காளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவருமான திரைப்பட நடிகர் விஷ்ணுப்பிரியன் கலந்துகொண்டு துணியகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாடகர் எஸ்பிபாலசுப்ரமணியம் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர், அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என நடிகர் விஷ்ணுப்பிரியன் கூறினார். இசையமைப்பாளர் இளையராஜாவை வெளிக் கொண்டு வந்த பெருமை எஸ்பிபியே சாரும் எல்லோரையும் மதித்தவர், எஸ்பிபி கொரோனா விழிப்புணர்வு பாடலில் எஸ்பிபி உடன் பாடியது எனக்குப் பெருமை என்றும், நமது நாட்டின் மிகப்பெரிய அடையாளம் எஸ்பிபி ஆவார் என்று தெரிவித்தார்.

இக்கடையின் சிறப்பம்சமாக கொரோனா பணியில் சேவை செய்யும் காவலர்களை கௌரவப்படுத்தும் வகையில் கடையில் லாக்கப் போன்ற அறையும், காவல்துறை கட்டிடம் போன்ற வர்ணமும் பூசப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாக இயக்குனர் சரவணன் என்பவர் கூறும்போது, கொரனோ பணியில் சேவை புரிந்த காவலர்களை கௌரவப்படுத்தும் வகையில் கடையில் லாக்கப் அறையும், காவலர் கட்டிடம் போலவும் அமைத்துள்ளதாகவும், கொரோனா சேவைப் பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு சலுகை வசதியும் அளிக்கப்படும் என்று தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் மற்றும் செந்தில், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 4 =