ஊரடங்கின் 5ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு

ஊரடங்கின் 5ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பரவல் கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் 1ம் தேதி முதல் படிப்படியாக தளர்வுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது அமலில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்றோடு முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து, ஊரடங்கின் 5ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அக்.31ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு. தியேட்டர்களை அக்.15ம் தேதி முதல் திறக்க அனுமதி 50 சதவிகித இருக்கைகளையே நிரப்ப வேண்டும். நீச்சல் குளங்கள் பொழுது போக்கு பூங்காக்களை திறக்கலாம். பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம். அக்டோபர் 15ம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

22 + = 32