அறந்தாங்கி அருகே பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி ஊட்டசத்து மாத விழா கொண்டாடப்பட்டது.

அறந்தாங்கி அருகே நாகுடி அங்கன்வாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட வளைகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மாத விழா சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடி அங்கன்வாடி மையத்தில் ஊட்டசத்துமாதவிழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஊட்டசத்தின் அவசியம் குறித்து விளக்கியதோடு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் அவர்களுக்கு சத்தான பழங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஒன்றிய அங்கன்வாடி பணியாளர் சங்க தலைவர் முத்துலட்சுமி அங்கன்வாடி பணியாளர் சசிகலா மற்றும் நாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் கலக்குடி மாணவநல்லூர் அருணாசலபுரம் களக்குடி தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்,நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 1 =