அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு யுஜிசி விதிமுறைக்கு எதிரானது: ஏஐசிடிஇ

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிமுறைக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தொழிநுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) கூறியுள்ளது.

கொரோனா காரணமாக அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து முன்னாள் துணை வேந்தர் பாலகுமாரசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழிநுட்ப கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிமுறைகளுக்கு எதிரானது. இறுதியாண்டு மாணவர்களுக்கு அரியர் தேர்வை நடத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளோம்.

தேர்வு மூலம் மாணவர்களை மதிப்பிடாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது ஏஐசிடிஇ விதிமுறைகளுக்கு எதிரானது. கல்லூரி இறுதிப்பருவ தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என அறிவித்திருந்தோம். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டம் வழங்கப்படும். தேர்வு எழுத விலக்கு இல்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − 27 =