‘வளர்ச்சிப் பாதையில் கிராமங்கள்; டிராக்டர் விற்பனை அமோகம்’: நிர்மலா சீதாராமன்

‘கிராமப்புறங்களில் தொழில்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. டிராக்டர் விற்பனை, விவசாய உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளது’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கொரோனா தொற்று ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளை தணிக்க கடந்த மே மாதம், ரூ.20 லட்சம் கோடி ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது:ஊக்குவிப்பு திட்டங்கள் முடிந்துவிடவில்லை. தேவைப்பட்டால் தொடரும். அவசரகால கடன் உத்தரவாதம் திட்டத்தின் பலன்கள் எம்.எஸ்.எம்.ஈ.,க்களுக்கு மட்டுமின்று தனிப்பட்ட உரிமையாளர்கள், கூட்டு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு அதிக பணப்புழக்கம் வழங்கப்பட்டது.

பொருளாதார நடவடிக்கைகளை கொரோனா மோசமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ஜி.டி.பி.,யில் 55% பங்குகொண்ட சேவைத் துறை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. உற்பத்தித் துறைகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணிக்குத் திரும்புகின்றனர்.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் நேரடியாக மக்கள் வங்கி கணக்கு பணம் செலுத்தும் வசதி இந்தியாவில் உள்ளது. இதனால் தேவைப்படும் நபருக்கு பணம் சென்றடைந்ததா என்பது குறித்து அரசு கவலைப்பட தேவையில்லாமல் போனது. விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.2,000 சென்றடைந்துள்ளது. கிராமப்புறங்களில் தொழில்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அந்த பகுதிகளில், டிராக்டர் விற்பனை, விவசாய உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 6 = 8