பீஹாரில் லாலு கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் கிரிமினல்களுக்கு வேலை: பட்னவிஸ்

பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால், 10 லட்சம் கிரிமினல்களுக்கு தான் வேலை கிடைக்கும் என மஹா., முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

பீஹாரில், மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளும், லாலு பிரசாத் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில், காங்., மற்றும் கம்யூ., கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனாதள தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், கட்சியின் முதல்வர் வேட்பாளருளான தேஜஸ்வி யாதவ், ‛தேர்தலில் வெற்றி பெற்று, நாங்கள் ஆட்சியமைத்தால் உடனடியாக, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம்,’ என வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், பீஹார் மாநில பா.ஜ,. தேர்தல் பொறுப்பாளருமான தேவேந்திர பட்னவிஸ், பாட்னாவில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கப்போவதாகத் தேஜஸ்வி கூறியுள்ளார். இந்த வேலை 10 லட்சம் கிரிமினல்களுக்கு தான் கிடைக்கும். 10 லட்சம் நாட்டுத் துப்பாக்கிகளுக்கு, தேஜஸ்வி ஆர்டர் கொடுப்பார். அந்த ஆயுதங்களை கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்களான தனது ஆதரவாளர்களுக்கு அளிப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 2 =