பாரதிய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் அறிமுக விழா

தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை பாஜக கட்சியினர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, மாநிலச் செயலாளர் தமிழ், தாமரை, வெங்கடேஷ், மாநில செயலாளர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப மாநிலத் தலைவர் நிர்மல்குமார் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதீஷ், பொருளாளர் விநாயகம், ஓபிசி அணி மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன் மற்றும் ஜவகர், ஆறுமுகம், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 8