ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 11-வது லீக் ஆட்டத்தில் டெல்லி- ஐதராபாத் அணிகள் மோதின.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் இன்றைய 11-வது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை துவக்கிய ஐதராபாத் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு டெல்லி அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =