விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டணியில் எடுத்த முடிவின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்கோவன், திராவிட கட்சி பெரியசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எம்.ஷேக் நவீத், மதிமுக பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.குழந்தான், ஆதி தமிழர் பேரவை மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் மணிமாறன், மனித நேய மக்கள் கட்சி எஸ்.அஹதுல்லாஹ், இந்திய ஜனநாயக கட்சி பி.முத்துராஜா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாதேஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒன்றிய செயலாளர் தௌலத்கான், பழனிவேல், நாமக்கல் கௌதம், புதுச்சத்திரம் வடக்கு துரை (எ) ராமசாமி, மோகனூர் நவலடி மோகனூர் பேரூர் தலைவர் சரவணன், பேரூர் பொருப்பாளர் குமரவேல் ஆகியோரது முன்னிலையில் நாமக்கல் நகரம் மோகனூர் ரோடு அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்தனர்.மாவட்ட நிர்வாகிகள் அவைத் தலைவர் உடையவர் மாவட்ட துணை செயலாளர் இராமலிங்கம், மாநில மகளிர் தொண்டர் அணி இணை செயலாளர் இராணி, மாநில சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் நக்கீரன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், தலைமை பேச்சாளர் ராஜகோபால், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் அணியினர், வார்டு செயலாளர்கள் மற்றும் முன்னோடிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 4