மக்கள் நீதி மய்யம் கட்சி யின் முப்பெரும் விழா புதுக்கோட்டையில் நாளை மறுநாள் நடைபெறுகின்றது

புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முப்பெரும் விழா நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெற உள்ளது.கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மத்திய மாவட்ட செயலாளர் ஜெய் பார்த்தீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா நாளை மறுநாள் காலை9.30 மணி அளவில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பெரியார் நகரில் நடைபெற உள்ளது. கட்சி அலுவலகத்தில் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கட்சியின் பொது செயலாளர் எம். முருகானந்தம் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் பொன் கஜேந்திரன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம் மாநில துணை செயலாளர் கே செந்தில் குமார் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். விவசாய அணி செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, வழக்கறிஞர் அணி மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடக பிரிவு ஹக்கீம், புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுந்தர், திருமயம் ஒன்றிய செயலாளர் திருமேனி, உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் விழாவில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் எங்கள் நம்மவரின் அன்பான ரசிகர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்றும் விழா சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற உள்ளதாகவும் நகர செயலாளர் எம் ராஜகோபால் நன்றியுரை ஆற்ற உள்ளதாகவும் ஜெய் பார்த்தீபன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

87 − = 82