தமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,86,397ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 5,30,708 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,554 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 70 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,383-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1283 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 164744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 71,81,125 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,465 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 184 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,53,858 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,396 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,32,508 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,192 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =