கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியன் பிரிமியர் லீக் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. ஐதராபாத் அணியில் மிட்சல் மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் சர்மாவுக்கு பதிலாக முகமது நபி, விரிதிமன் சகா, கலீல் அகமது சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் நிகில் நாயக், சந்தீப் வாரியர் நீக்கப்பட்டு வருண், கமலேஷ் நாகர்கோட்டி தேர்வாகினர். டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது. முன்னதாக ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடமும், கொல்கத்தா அணி தனது தொடக்க ஆட்டத்தில் மும்பையிடமும் தோல்வியடைந்துள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் இதுவரை தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை. இதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக முயற்சி மேற்கொள்ளும் என்பதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. கொல்கத்தா அணி வீரர்கள்: சுக்மன் கில், சுனில் நரேன், நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக், இயன் மோர்கன், ஆண்டே ரசல், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், நாகர்கோட்டி, வி சக்ரவர்த்தி. ஐதராபாத் அணி வீரர்கள்: டேவிட் வார்னர், ஜானி பிரிஷ்டோ, மணீஷ் பாண்டே, பிரியம் ஹர்ஹ், சஹா, முகமது நபி, அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, டி நடராஜன். போன்ற வீரர்கள் அணியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 5