ராகுல் சதம்: பஞ்சாப் ரன் குவிப்பு

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல் சதம் விளாச, பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் குவித்தது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் ஜோர்டான், கவுதம் நீக்கப்பட்டு ஜேம்ஸ் நீஷாம், முருகன் அஷ்வின் தேர்வாகினர்.

‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் 132 ரன்கள் எடுத்து கைகொடுக்க, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் துபே 2 விக்கெட் வீழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

45 + = 54