போச்சம்பள்ளி காவல் ஆய்வாளருக்கு அண்ணா விருது

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் அ.சுப்பரமணியன் அவர்களுக்கு தமிழக அரசு அண்ணா விருது வழங்குவதாக தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர்,
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொலை வழக்கில் காவல் ஆய்வாளராக பணியாற்றியபோது, கொலை வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்து, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத்தந்தது மற்றும் பணிக்காலத்தில் எந்தவித புகாருக்கும் உள்ளாகாமல், சிறப்பாக பணியாற்றியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் காவல்துறை சிறைத் துறையில் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர் முதல் காவலர் வரையில் 100 பேருக்கு இந்த ஆண்டு, அண்ணா பதக்கம் வழங்கப்படுவதாக அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொருவருக்கும் அண்ணா பதக்கமும் ரூ 10 ஆயிரம் ரொக்க பரிசாகவும் வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =