பொன்னமராவதியில் ப.சிதம்பரத்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

பொன்னமராவதியில் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 75வது வைரவிழா பிறந்தநாளை முன்னிட்டு பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.

அதன் பின்பு  ஆலவயல் ஸ்ரீ வேட்டைக்கார சுவாமி கோவிலில் ப.சிதம்பரம் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வேண்டி சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது.  பின்பு ஆலவயல் காங்கிரஸ் கமிட்டி இடத்தில் உள்ள கொடிகம்பத்தில் வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழா நிகழ்ச்சியில் நகர தலைவர் பழனியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ஜூவானந்தம், நாட்டுக்கல் ராஜேந்திரன், கொப்பனாபட்டி ராஜேந்திரன், தேனூர் கிரிதரன், தொட்டியம்பட்டி சோலையப்பன், ஏனாதி போஸ்,  அடைக்கலம், துத்தூர் சம்பத், இளைஞர் காங்கிரஸ் சுப்பையா,  பாஸ்கரன், ஆலவயல் சுப்பையா, மலையாண்டி, கண்ணன்,  திருவாசகம் மற்றும் காங்கிரஸ் கட்சி கிராம கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1