புதுக்கோட்டையில் 18ம் தேதி வெள்ளிக்கிழமை மின் வினியோகம் இருக்காது

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சையதுஅகமதுஇஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை புதுக்கோட்டை 110/22 துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெரு மாநாடு, திருவரங்குளம், வல்லக்கோட்டை, நச்சாந்துபட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாபட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேனா விளக்கு, எல்லை பட்டி, செல்லுகுடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என்றும் பொதுமக்கள் அதற்கு தகுந்தார்போல் தங்களுடைய பணிகளை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார், இந்த அறிவிப்பானது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்றும் தனது செய்திகுறிப்பில் சையதுஅகமதுஇஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 2 =