புதிய கல்விக்கொள்கை மாநில உரிமைக்கு எதிரானது: ஸ்டாலின்

புதிய கல்விக்கொள்கையானது மாநில உரிமைக்கு எதிரானது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது : புதிய கல்விக்கொள்கை மாநில உரிமைக்கு எதிரானது. இக்கொள்கை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம், சமத்துவம், தமிழ்மொழிக்கும் எதிரானது. தேசியகல்வி கொள்கையை முழுமையாக எதிர்க்க வேண்டும். குலக்கல்வி திட்டத்தின் மறுஉருவம் இந்த புதிய கல்விக்கொள்கை. இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் இ.பி.எஸ்., புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இதனை தொடர்ந்து புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து சட்டசபையில் இருந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − 55 =