பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாளை முன்னிட்டு ராட்சத பலூன் பறக்கவிட்டு கொண்டாட்டத்தை துவக்கிய பாஜக நிர்வாகிகள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எழுபதாவது பிறந்த நாள் விழாநாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அவரின் பிறந்தநாளை வரவேற்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வழிபாடுகள் செய்து வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் 120 அடி உயரத்தில் ராட்சத பலூன் பிரதமர்மோடி திருவுருவ படம் பதித்த ராட்சத பலூன் கட்சி நிர்வாகிகள் பறக்க விட்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுரேஷ்பாபு கலந்துகொண்டார்.இந்த ராட்சத பலூனை அப்பகுதிவழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்துச் சென்றனர். இதுகுறித்து சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ் பாபு கூறுகையில்: சமீபகாலமாக தமிழகத்தில் பாஜக எவ்வளவு தூரம் வளர்ந்து வருகிறது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த ராட்சத பலூன் பறக்கவிட்டு பொதுமக்களிடையே பாஜக குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ராட்சத பலூன் பறக்க விடப்பட்டு உள்ளதாகவும் இதேபோல பாரத பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி எதிர்வரும் ஒருவார காலத்திற்கு மாநகர் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட பகுதிகளில் பல்வேறு சேவைகளை செய்ய சேலம் மாநகர் மாவட்ட பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் அவர்களின் கூற்றின்படி பாஜக தனித்து போட்டியிட்டு கணிசமாக 60 சட்டமன்ற தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 89 = 93