பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.,30-ல் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கத்தியார் உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியேரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்து 2001ல் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை ஆக. 31க்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தி வழக்கை சி.பி.ஐ. தினசரி விசாரித்து வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடந்த ஜூலை 24 மற்றும் 24-ம் தேதிகளில் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜராகி . நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் முன், அவர் அளித்த வாக்குமூலம், பதிவு செய்யப்பட்டது.


இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அன்றைய தினம், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எல்கே அத்வானி, முரளிமனோகர்ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கத்தியார் உள்ளிட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =