பாஜக பிரமுகர் கொலையை கண்டித்து கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாஜக பிரமுகர் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதி ஒன்றிய இளைஞரணி தலைவர் ரங்கநாத் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரேகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார் மாவட்ட பொதுச்செயலாளர் டெம்போ முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், மாவட்ட செயலாளர் திருமலைபெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணபிரபு, நகர தலைவர் ஆர்மி ரமேஷ், மின்னல் சிவா, மன்னன் சிவா, பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ஆர்ப்பாட்டத்தில் பாஜக பிரமுகரை கொலை செய்த கொலை குற்றவாளிகளை உடனடியாக பிடித்து தண்டிக்க வேண்டும் எனவும், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பாஜக தலைவர்கள் கொல்லப்படுவது குறித்து மாநில முதல்வர் எடப்பாடி அவர்கள் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படுவது போல் அதிரடியாக செயல்பட்டு குற்றவாளிகளை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாஜக பிரமுகர் இறப்புக்கு மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பதி கவுண்டர்
அசோக்ராஜ், ரவிச்சந்திரன், ஞானசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நகர செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3