நடிகர்களுக்கு தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் கோரிக்கை

நடிகர்கள் தேசப்பற்று உள்ளவர்களாக இருக்க வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிராக மாணவர்களை தூண்டி விடக் கூடாது என்று தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் இப்ராஹிம் தஞ்சாவூரில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நல சட்ட திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத் சார்பில் தொடர் யாத்திரை நடைபெற்று வருகிறது அதன்படி தஞ்சாவூருக்கு வந்த ஏகத்துவ ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் இப்ராஹிம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்:

நீட்தேர்வு தவறானது தமிழகத்திற்கு எதிரானது என்று திமுக தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது மாணவர்களின் இறப்பை வைத்து மரண வியாபாரம் திமுக செய்கிறது என்று குற்றம் சாட்டினார். நடிகர் சூர்யா இந்து கடவுள்களை இழிவு படுத்துவதும் மத்திய அரசை இழிவுபடுத்துவதையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தை மதிக்காமல் நீதிபதியையே கொச்சைப் படுத்துகின்ற செயல் இது என்றும் நடிகர்கள் தேசப்பற்று உள்ளவர்களாக இருக்க வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிராக மாணவர்களை தூண்டி விடுகின்ற செயல்களை செய்கின்றார்கள்  திமுக பின்புலத்தில் இவற்றை செய்கின்றார்கள் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். மேலும் பிரதமர் விவசாய திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் இப் பேட்டியின் போது பாஜக மாவட்ட  தலைவர் பண்ணவயல் இளங்கோ,மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதிஷ், பொருளாளர் விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 − 78 =