தினக்கூலி, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்க உள்ளாட்சித் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, செப்.16- நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்த மற்றும் சுய உதவிக்குழு, தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதுக்கோடடையில் புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.காயாம்பு மற்றும் நிர்வாகிகள் ஏ.முகமதுஅனிபா, கே.மாரியப்பன், எஸ்.கவிபாலா உள்ளிட்டோர் பேசினர்;. 
ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்தத் தொழிலாளி, சுய உதவிக்குழு மற்றும் தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை காவலர், துப்புரவு தொழிலாளி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு அரசு அறிவித்தபடி நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும். ஒன்றியங்களில், கிராம பஞ்சாயத்துகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய எட்டு முதல் ஒன்பது மாதம் வரை உள்ள சம்பள பாக்கி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

55 − 48 =