டில்லி கலவர வழக்கில் 17,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி கலவர வழக்கில் இன்று 17,500 பக்க குற்றபத்திரிகையை டில்லி போலீசார் கோர்ட்டில் சமர்பித்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த சி.சி.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லியில் கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. டில்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மாவுஜ்பூர், சீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் பரவியது. இந்த கலவரத்தில் 54 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரூ. 20 கோடி மதிப்பிலான பொது சொத்துக்கள் சேதமடைந்தன.

கலவர வழக்கை டில்லி சிறப்பு போலீஸ் படையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இன்று 17,500 பக்க குற்றப்பத்திரிகையை கிழக்கு டில்லி கர்கார்டோமா கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 15 பேர், இரண்டு 25 வாட்ஸ்ஆப் குருப்பினர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2