சீத்தாராம்யெச்சூரி மீது பொய்வழக்கை கண்டித்துபுதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள்மீது பொய்வழக்குப் போட்ட டில்லி காவல்துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசியலமைப்பு சட்டத்தை பாதுக்காத்திட போராடும் ஜனநாயக சக்திகளை தேசதுரோகிகளாக மத்திய பாஜக அரசு சித்தரித்து வருவதாகவும். அவர்கள் மீது காவல்துறையை பயன்படுத்தி கிரிமினல் வழக்குகள் புனையப்படுவதாகவும் அதனொரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீதும் டில்லி காவல்துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது என்றும். பாஜக அரசின் இத்தகைய அராஜக போக்கைக் கண்டித்தும், வழக்கை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் புதன்கிழமையன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பின் ஐ.வி.நாகராஜன் கண்டன உரையாற்றினார்.போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், வி.துரைச்சந்திரன், சி.சுப்பிரமணியன், சி.அன்புமணவாள், ஜி.நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஜியாவுதீன், எஸ்.பீமராஜ், வி.ரெத்தினவேல், த.அன்பழகன், எல்.வடிவேல், சா.தோ.அருனோதயன், எம்.ஆர்.சுப்பையா, எம்.பாலசுந்தரமூர்த்தி, துரை.நாராயணன், நெருப்பு முருகேஷ், தென்றல் கருப்பையா, டி.சலோமி, பி.சுசீலா, எஸ்.பாண்டிச்செல்வி, சி.மாரிக்கண்ணு, எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 − 22 =