குமரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும்- தூத்துக்குடியில் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

தூத்துக்குடி மதுரை புறவழிச்சாலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 70 அடி கொடி கம்பத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்:

நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தில் மாணவர்கள் உயிரிழப்பு என்பது வேதனைக்குறியது அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்கின்றோம்.நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் கட்சியினர் பிணம் தின்னும் கழுகுகளை போல் அலைகின்றனர் அப்படி இருக்ககூடாது என்பது எனது கருத்து.

அரசியல் கட்சியினருக்கு குழப்பம் இருப்பது நீட் தேர்வு குறித்து இல்லை 2021-சட்டமன்ற தேர்தல் குறித்தது எனவே மாணவர்கள் இவர் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம் என்ன பேச வேண்டும் என்ன பேச வேண்டாம் என தெரியாமல் பேசி வருகின்றனர்.இவர்கள் மூன்று தலைமுறையாக பிணம் தின்னும் அரசியல் செய்கின்றனர் என்ற அவர் குமரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

61 − = 59