‘ஒரு மாதத்தில் தடுப்பூசி:’ டிரம்ப் அறிவிப்பை நம்ப மறுக்கும் அமெரிக்கர்கள்

‘அமெரிக்க மக்களுக்கு இன்னும் ஒரே மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும்’ என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், ‘அதை அமெரிக்க மக்கள் நம்பவில்லை’ என, கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். ‘ஆரம்பத்திலேயே நோயின் வீரியத்தை கணிக்காமல் அலட்சியம் செய்ததே இந்தளவு பாதிப்புக்கு காரணம்’ என, எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே நவ., 3ம் தேதி அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மோதுகின்றனர்.

இந்த நிலையில் பென்சைல்வேனியாவில் வாக்காளர்கள் கேள்விக்கு டிரம்ப் பதிலளித்துப் பேசுகையில், ‘தடுப்பூசி மிக விரைவில் கிடைக்கும். அது மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் இருக்கலாம்’ என்றார். அமெரிக்க செய்தி சேனல் நடத்திய கருத்துக்கணிப்பில், ’52 சதவீதம் அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த டிரம்ப்பின் இந்த அறிக்கையை நம்பவில்லை. 26 சதவீதம் பேர் நம்புகின்றனர்’ எனத் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 4