ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பதவிகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி

ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பதவிகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஐ.நா., பெண்கள் நிலைமை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம், ஐ.நா., வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதற்கான உறுப்பினர்கள், பிராந்திய அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அடுத்த நான்கு ஆண்டு பதவிக் காலத்துக்கு, ஆசிய – பசிபிக் பிராந்தியம் சார்பில் இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., பொதுச் சபையில் நடந்தது.

இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்டன. ஆப்கானிஸ்தான், 39 ஓட்டுகளும், இந்தியா, 38 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றன. ஐ.நா.,வின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனாவுக்கு, 27 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. மொத்த ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுகளை கூட சீனாவால் பெற முடியவில்லை. இதே போல் பொருளாதார சமூக கவுன்சில் மற்றும் நிகழ்ச்சி திட்டமிடல் குழுவான CPC ஆகிய இரண்டு ECOSOC பதவிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

42 + = 48