விமான சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமான சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் மக்களவையில் விமான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் மூலம் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தை சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு கழகமாக மாற்றவும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் புதிய மாற்றங்கள் கொண்டுவரவும் மத்திய அரசு முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த விமான சட்ட திருத்த மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூர் தாக்கல் செய்தார்.

இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் விமான நிலையங்களுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வது போன்ற விமான போக்குவரத்து தொடர்பான விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வகை செய்கிறது.

விமான நிலையங்களை சுற்றில் சட்டவிரோதமாக கட்டடங்கள் எழுப்புவது தடை செய்யப்படுகிறது. இந்த விதிகளை மீறி செயல்படுவோர் மீது 10 லட்சம் முதல் 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த திருத்த மசோதா வகை செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 40 = 50