மாணவர் சங்கத் தலைவர்மீது தாக்குதலைக் கண்டித்து வாலிபர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்திய மாணவர் சங்கத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு கொடுமையால் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு தீக்கிரையாக்கப்படுகிறது. மன உளைச்சலின் காரணமாக் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் தேர்வை ரத்துசெய்யவும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமையன்று சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் சங்க மாநில செயலாளர் வி.மாரியப்பன் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் கொடூரமான முறையில் தாக்குதல் தொடுத்துள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய அராஜகத்தை கண்டித்து வாலிபர், மாணவர் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்தன், வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.அருண் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, வாலிபர் சங்க நகர தலைவர் எஸ்.விக்கி, செயலாளர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரம்பக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.இளமாறன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாராயணன், துணைத் தலைவர் இளையராஜா, வைரமணி, லாக்சாகினி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். அறந்தாங்கியில் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் மாவட்ட தலைவர் ஆர்.கர்ணா, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கந்தர்வகோட்டையில் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் லோகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.இளமாறனம், துணை செயலாளர் வி.இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழையூரில் வாலிபர் சங்கத்தின் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் என்.பி.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை.நாராயாணன், துணைச்செயலாளர் வி.இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

67 − = 64