புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் தேசிய பொறியாளர் தின விழா

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் தேசிய பொறியாளர் தின விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் இன்று தேசிய பொறியாளர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பொறியாளர்கள் ராஜதுரை, முரளி, ரவி, சௌந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் சரவணன், ரோட்டரி மாவட்ட பொதுச் செயலாளர் பொறியாளர் கான் அப்துல் கஃபார் கான், ரோட்டரி நிர்வாக செயலாளர் பொறியாளர் கனகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பஷீர் முகமது, ரோட்டரி துணை ஆளுனர் கிருஷ்ணமூர்த்தி, ரோட்டரி மாநாட்டு தலைவர் லியோ ஃபெலிக்ஸ் லூயிஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.

சர். மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான இன்று நாடெங்கும் தேசிய பொறியாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சங்கத்தின் பொறியாளர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர் கதிரேசன் செய்திருந்தார். நிறைவில் முன்னாள் தலைவர் ஜெய் பார்த்தீபன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 71 = 76