தமிழகத்தில் இன்று 5,697 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,14,208ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 49,30,237 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக கொரோனாவுக்கு 80,776 பேர் பலி ஆகியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38,59,400 ஆக அதிகரித்துள்ளது. 9,90,061 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இல்லாத புதிய உச்சமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,054 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூறியதாவது: தமிழகத்தில் கொரோனாவால் இன்று 5,697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,58,900 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,735 பேர் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 68 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,502-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 989 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,50,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 170 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 60,48,832 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 6