கிருஷ்ணகிரியில் அண்ணாவின் 112ம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக் குமார் ஆகியோரின் ஆணைகிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தின் சார்பாக அண்ணாவின் 112வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் எவிஎம்.மது – ஹேம்நாத், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய குழுத்தலைவர் லாவண்யா ஹேம்நாத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர்கள் பாபு, லோகேஷ், கோ.ஆப் சொசைட்டி செல்வராஜ், தலைவர் கலைச்செல்வி ராமன், கவுன்சிலர் சங்கீதா ரமேஷ், ஸ்ரீராம், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தகவல் தொழில் நுட்பபிரிவு நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 50 = 51