இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் மாரியப்பன் மீது காவல்துறை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜனார்த்தன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அருண் தலைமையில் நடைபெற்றது. இதில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: மாநில செயலாளர் மாரியப்பன் மீது சென்னை காவல்துறை கடுமையான தாக்குதலை கண்டித்தும். நீட் தேர்வை ரத்து செய். கல்வியை மாநிலப்பட்டியலில் இணைத்திடு. புதிய கல்விக் கொள்கையை கைவிடு. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ன ஆனது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஓவியா மற்றும் வாலிபர் சங்க நகர தலைவர் விக்கி, செயலாளர் பாபு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 + = 48