ஆவுடையார்கோவில் அருகே நெட்டியேந்தல் கண்மாய் தூர்வாரும் பணியில் ஊழல், விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

ஆவுடையார்கோவில் அருகே நெட்டியேந்தல் கண்மாய் தூர்வாரும் பணியில் ஊழல் நடைபெற்றதாக கூறி, நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் யூனியன் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், கிழச்சேரி ஊராட்சியில் உள்ள நெட்டியேந்தல் கிராமத்தில் உள்ள ஏரியை தூர் வார தமிழக அரசு சுமார் ரூ – 5,15.000, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, ஆனால் டெண்டர் விடாமலும், ஆயக்கட்டு தாரர்களிடம் அந்த வேலையை விடாமல் ஒப்பந்ததாரர்கள் ஏரியின் கரையை உயர்த்தாமல் பில் எடுக்க முயற்ச்சி செய்துள்ளனர் என்பது குற்றச்சாட்டு.

அதனை அறிந்த ஆவுடையார்கோவில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்து ஏரியின் முழு வேலையையும் முடித்த பின்பு பில் எடுங்கள் என்று கூறியுள்ளார், அதற்கு ஒப்பந்ததாரர் முத்துவை தரக்குறைவாக பேசி தாக்க முயற்ச்சி செய்துள்ளதாக கூறப்படுகின்றது, அதனால் இன்று காலை 10 மணி அளவில் ஆவுடையார்கோவில் யூனியன் அலுவலகம் முன்பாக வி.ச, ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் வி.ச, மாநிலக்குழு உறுப்பினர் சுந்தராசன், மாவட்ட தலைவர் மற்றும் சி.பி.ஐ ஒன்றிய செயலாளர் கணேசன் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 87 = 90