மதுரையில் கொரோனா சிகிச்சைக்கான முதல் தனியார் வெற்றி சித்த மருத்துவமனை: கலெக்டர் துவக்கி வைத்தார்

தமிழக அரசு அனுமதி பெற்ற முதல் தனியார் சித்த மருத்துவமனை மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே தனிச்சியத்தில் கோவிட் 19 சிகிச்சைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது இம்மருத்துவமனையை மதுரை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரசை முற்றிலும் தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றன.அந்த வகையில் கோவிட் 19 சிகிச்சையில் சித்த மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. சித்தமருத்துவத்தின் மூலம் கொரோனா நோயாளிகள் பலர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு தனியார் அமைப்பும் சேவையாற்றி வருகிறது.

இதில் மதுரை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன், வெற்றி சித்த மருத்துவமனை நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வம், மருத்துவர்கள் சுகாதார துறை அலுவலர்கள் வாடிப்பட்டி வட்டாட்சியர் பழனிகுமார், தலைமை நிர்வாக அதிகாரி சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 − 85 =