பாரத பறவைகள் அறக்கட்டளை சார்பில் எல்லை வழிகாட்டி பலகை அமைத்தல்

ஆலங்குடி அருகே மக்கள் நலன் கருதி பாரத பறவைகள் அறக்கட்டளை சார்பில் பல இடங்களில் எல்லை வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட குளமங்கலம் தெற்கு ஊராட்சி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகாமையில் நான்கு வழிச்சாலை சந்திப்பு (பிரிவுச்சாலை) அமைந்துள்ளது. கொத்தமங்கலம், கீரமங்கலம், குளமங்கலம் ஆகிய பகுதிகளில் எங்கு நின்று பார்த்தாலும் சாலைகள் தான். இதில் அன்றாட சாலைகளில் வரும் பொதுமக்கள் வழிகாட்டி பலகை இல்லாததால் எந்த பக்கம் செல்வது என்று திசை தெரியாமல் தவறான வழியில் சென்று விடுகிறார்கள்.இப்பிரச்சனையை அரசு துறைக்கு பலமுறை கூறியும் அப்பகுதிக்கு இதைப்பற்றி சரிசெய்வதற்கு கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

இதைப்பார்த்த பாரத பறவைகள் அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் நலன்கருதி எல்லை வழிகாட்டி பலகை நிறுவப்பட்டது.ஆவணத்தான்கோட்டை மற்றும் பல எல்லையிலும் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. இதில் அறக்கட்டளையின் தலைவர் மெய்யநாதன், துணைத்தலைவர் முரளி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2